Friday, May 5, 2017

405. இறை எங்கே தோன்றியது(நதி எங்கே போகிறது)



இறை-எங்கே தோன்றியது அது-நம் நாடே
நாடென்றே  தோன்றியது இறைவன்-தானே
இறை-என்றே சொல்வதெதை அன்பைத் -தானே
அன்பென்றால் என்ன-அது சாய்ராம்-தானே
(2)
இறை-எங்கே தோன்றியது அது-நம் நாடே
(MUSIC)
அவதாரம் நூறு-வரும் இறைவன்-ஒன்று
தேகங்கள் கொண்டு-வரும் மனிதன்-என்று
(2)
லோகத்தில் மறுபடியும் ப்ரேமை தந்து  (2)
காத்திடுவான்  சாயிபிரான் விரைவில் வந்து
 இறை-எங்கே தோன்றியது அது-நம் நாடே
(MUSIC)
வெள்ளி எழும் வேளையிலே நகர சங்கீதம்
பர்த்தியிலே தந்திடுவான் தரிசனம் நாளும்
(2)
வேறெங்கும் இருக்கிறதா சொர்க்கம் என்று (2)
கொண்டே நாம் மகிழுவது சாயியின் அன்பு
இறை-எங்கே தோன்றியது அது-நம் நாடே
நாடென்றே  தோன்றியது இறைவன்-தானே
இறை-என்றே சொல்வதெதை அன்பைத்-தானே
அன்பென்றால் என்ன-அது சாய்ராம்-தானே
இறை-எங்கே தோன்றியது அது-நம் நாடே
சாய்ராம் ஸ்ரீசாய்ராம்-ராம்..சாய்ராம்..சாய்ராம்




No comments:

Post a Comment