Monday, May 8, 2017

361. பொன்மனம் கொண்டாய் (பொன்மகள் வந்தாள் ) ***



பொன்மனம் கொண்டாய் எமை நாடி வந்தாய் 
பூலோக அன்புத்-தந்தை தாயாக 
கண்களில்-அன்பும் கையோடும்-நீறும் ஆறாக்கினாய் சாயிராம் 
பொன்மனம் கொண்டாய் எமை-நாடி வந்தாய் 
பூலோக அன்புத்-தந்தை தாயாக
(MUSIC)
 அன்றைக்கே கொடுத்தாய் நிஜச்-சொல் 
பர்த்திக்குள் இருப்பேன் எனும்-சொல்
(2) .. 
சாயிராமா 
என்றைக்கும் நினைப்பில் இருக்கும் சத்தேஉன் மயக்கம் எனக்கும்  
 போக்க நீ வா 
நிலவுபோல்  உன்முகம் ஆக்குதே பரவசம் 
தேனிலே தோய்த்த-உன் பேச்சுதான் அதிரசம் 
பொன்மனம் கொண்டாய் எமை-நாடி வந்தாய் 
பூலோக அன்புத்-தந்தை தாயாக
 (MUSIC)
என்றும்என் நினைப்பில்ஒரேபேர் கல்கண்டின்இனிப்பின் அதேமேல் (2) 
சாயிநாமம் 
என்றைக்கும் இருக்கும் அதேபேர் சிந்தைக்குள் சுகத்தைத் தரும்பேர்
சாயிநாமம் 
அன்புதான் நம்மதம் சேவைதான் பெரும்சுகம் 
என்றசா..யீசனின் வாக்குதான் இதம் தரும்
 (SM)
பொன்மனம் கொண்டாய் எமை-நாடி வந்தாய் 
பூலோக அன்புத்-தந்தை தாயாக
கண்களில்-அன்பும் கையோடும்-நீறும் ஆறாக்கினாய் சாயிராம் 
பொன்மனம் கொண்டாய் எமை நாடி வந்தாய்
பூலோக அன்புத் தந்தை தாயாக
(MUSIC)





No comments:

Post a Comment