Wednesday, May 10, 2017

317.யாரை நொந்து (யாரை நம்பி நான் பொறந்தேன்) **




யாரை-நொந்து நீ பறந்தாய் சொல்லையா சொல்லு 
உன் கோபம்-தன்னை விட்டு-சாயி தள்ளையா தள்ளு
(1+SM+1)
கூப்பிடவே கும்பிடவே பாருக்குள்ளே தெய்வமில்லே (2)
கேட்டிடவே நாதியில்லே என்ன-செய்யத் தோணவில்லே 
யாரை-நொந்து நீ-பறந்தாய் சொல்லையா சொல்லு 
உன் கோபம்-தன்னை விட்டுச்-சாயி தள்ளையா தள்ளு
(MUSIC) 
என்னைக்கும்-தந்தாய் திருநீறு சென்னைக்குத்-தந்தாய் தண்ணீரு (2)
சாயி உன்நினைவே அமுதம்மா தினம்வந்து வாட்டுது அம்மம்மா
 சேனைகளும் ஏதுக்கம்மா ராஜபோகம் பந்தமம்மா
சோதனைகள் வந்துநின்னா உன்பதமே காக்குமம்மா
யாரை-நொந்து நீ-பறந்தாய் சொல்லையா சொல்லு 
உன் கோபம்-தன்னை விட்டுச்-சாயி தள்ளையா தள்ளு
(MUSIC) 
அஞ்சும் மனதே கலங்காதே 
கொஞ்ச வருவான் தாயாக 
(2)
கொடுத்தான் வாக்கை தெளிவாக
வருவான் சாயி நீ-பார்ப்பாய்  
பூமியிலே நொந்திடுவோர் தன்பசியை போக்குவதாய்
சேவைதனை நீ-புரிந்தால் சாயிபிரான் வந்திடுவான்
யாரை நொந்து நீ பறந்தாய் சொல்லையா சொல்லு 
உன் கோபம் தன்னை விட்டு சாயி தள்ளையா தள்ளு (2)
சாயிராம் வா வா.. சாயிராம் வா வா..


No comments:

Post a Comment