வேதஸ்வர நாதமதே ஞானபோத சாரமதே
இருமையிலும் காப்பததே சாயீஎனும் நாமமதே
வேதஸ்வர நாதமதே
ஆஹாஹஹா.. ஆஹாஹஹா..ஆஹாஹஹா..ஆஹாஹஹா..
ஓலமிட்ட கஜனின்உயிர் கணப்பொழுதில் காத்தததே (2)
சேலைதொட்டு துச்சனவன் வேலிதாண்டும் வேளையிலும்
தேறாத-கௌரவர்கள் வாழ்வழிக்க வரும்பொழுதும்
ஓடிவந்து காத்தததே சாயிக்ருஷ்ண நாமமதே
வேதஸ்வர நாதமதே ஞானபோத சாரமதே
இருமையிலும் காப்பததே சாயீஎனும் நாமமதே
வேதஸ்வர நாதமதே
(MUSIC)
பொய்விடுத்துக் கண்ணிரண்டில் நீர்சோர சேவையினை
கைப்பிடித்து நாமமதை நாம்-தினமும் சொல்லிவர
மெய்விளங்கும் வழிபிறக்கும் சொல்லவொணா ஜோதியிலே
சாயிபதம் கண்டிடலாம் காலபயம் வென்றிடலாம்
வேதஸ்வர நாதமதே ஞானபோத சாரமதே
இருமையிலும் காப்பததே சாயீஎனும் நாமமதே
வேதஸ்வர நாதமதே
(END)
வேதஸ்வர நாதமதே
(MUSIC)
கல்லில்-தரும் ஈரமய்யா நெல்லில்-அது சாரமய்யா
கற்பகமும்ஆகவந்து யாதும்தரும் நாமமய்யா
மேதினியைத் தோற்றம்செய்து பிறகதனை வாழவைக்கும் (2)
சத்தியத்தின் தோற்றமதே சாயிஎனும் நாமமதே
வேதஸ்வர நாதமதே ஞான போத சாரமதே
இருமையிலும் காப்பததே சாயீஎனும் நாமமதே
வேதஸ்வர நாதமதே
No comments:
Post a Comment