பாடணும் சாயிராம் புகழை என்றும்
மானிடன் உடலிலே வந்த போதும்
அவனை-நீ தெய்வமாய்க் காணவேண்டும்
நெஞ்சில்நீ அன்பையே பூணவேண்டும்
பாடுவோம் சாயிராம் புகழை என்றும்
(1+SM+1)
(MUSIC)
நாக்கில் இனித்திடும்தேன் வாட்டம் போக்கிடும்பேர்
யார்க்கும் அளித்திடும்தாய் சாய்போல் வேறில்லையே
(2)
அன்பை அளவின்றிமண்மேல் அள்ளி வழங்கிய சாயி (2)
வான்சிறந்த தேவர்பணிய நம்மைநாடி வந்த..வன்சாயி
நம்மைநாடி வந்த..வன்சாயி
(Brief Pause)
பாடணும் சாயிராம் புகழை என்றும்
(MUSIC)
பாதம் தனைநினைக்கும் நெஞ்சில் தோன்றும்இறை
சேவைபுரிந்திருக்கும் எவர்க்கும் உண்டாம்நிறை
நித்தம் அவன்வரக்கண்டு துள்ளி குதித்திடும்நெஞ்சு (2)
மானிடத்தின் வேஷம்கொண்டு மண்நடந்த தெய்வம்சாயி
மண்நடந்த தெய்வம்சாயி
(Brief Pause)
பாடணும் சாயிராம் புகழை என்றும்
மானிடன் உடலிலே வந்த போதும்
அவனை-நீ தெய்வமாய்க் காணவேண்டும்
நெஞ்சில்நீ அன்பையே பூணவேண்டும்
பாடுவோம் சாயிராம் புகழை என்றும்
No comments:
Post a Comment