Sunday, May 7, 2017

119. ஆறாய்வரும் துயரங்களே (ஓராயிரம் பார்வையிலே) *


(விருத்தம்)
மானிடனாய்ப் பிறந்தாலும்
தெய்வஉடல் மறைந்தாலும் 
நமைப்  பிரிந்து வெகுதூரம் சாயி  ஒருநாளும்   போவதில்லை
உலகத்தின் கண்களிலே அவன்உருவம் மறைந்தாலும்
நம்போன்ற  உள்ளங்களை விட்டுஅவன் செல்வதில்லை
(MUSIC)
ஆறாய்வரும்  துயரங்களே  
(Short Music) போய்அடங்கிடுமருட்கடலே
ப்ரசாந்தியில் பிறந்தவனே நீ சீ..ரடி இருந்தவனே
ஆறாய்வரும்  துயரங்களே  போய்அடங்கிடும் அருட்கடலே
(MUSIC)
நீ அளித்தநல் சேவையிலே..வினை போகுது கணத்தினிலே
அந்த வினைசெல்லும் போதினிலே..மனம் ஆயிடும் பளிங்கெனவே
சாயி காத்துநீ அருள் புரிந்தாய்..நோய் தீர்த்தனை அருமருந்தாய்
ஆறாய்வரும்  துயரங்களே 
 (Short Music) 
போய்அடங்கிடுமருட்கடலே
 ப்ரசாந்தியில் பிறந்தவனே நீ சீரடிஇருந்தவனே
ஆறாய்வரும்  துயரங்களே  
(Short Music) 
போய்அடங்கிடுமருட்கடலே
(MUSIC)
மன வேற்றுமை பேதங்களே..சேவை புரிவதில் சென்றிடுமே
அந்த கூற்றுவன்  பயங்களுமே..உன் பதம்தொழப் போய்விடுமே
நாம் கோரிடும் வரமும்ஒன்றே..நீ புவிவரும் பிறப்பு என்றே
ஆறாய்வரும்  துயரங்களே  
(Short Music)
போய்அடங்கிடுமருட்கடலே
ப்ரசாந்தியில் பிறந்தவனேநீ சீரடி இருந்தவனே
ஆறாய்வரும்  துயரங்களே  போய்அடங்கிடுமருட்கடலே





No comments:

Post a Comment