சாயிராம் புகழைப் பாடுவதாலே நாவுகள் ஓய்வதில்லை
அவன்புகழ்ப் பாட்டைக் கேட்பதனாலே
காதுகள் சோர்வதில்லை
சாயிராம்..சாயிராம்..சாயிராம்..(2)
_____________________
சாயித் திருப்புகழைப் பாடிவா
புகல்தேடி-அவன்-பதத்தை நாடிவா
சாயிராம்..சாயிராம்..சாயிராம்
(2)
(MUSIC)
தேன் போலும் அவன் நாமம் நீ கூறி வா
அந்த அமுதாகும் அவன் கானம் நீ-கேட்கவா
(2)
தடையென்ன இசைகேட்க விரைந்தோடி வா (2)
நன்னெஞ்சே-உன் மனம்-தேறும் புகழ்-பாடி வா.. .
சாயிராம்..சாயிராம்..சாயிராம்
சாயித் திருப்புகழைப் பாடிவா
புகல்தேடி அவன் பதத்தை நாடிவா
சாயிராம்..சாயிராம்..சாயிராம்.
(MUSIC)
துயர்யாவும் விரைந்தோடும் நீ காணடா
உன் நெஞ்சத்தில் இனிமேலே குறை ஏதடா
(2)
உலகாளும் நம்சாயி இறைதானடா (2)
வான்புகழ்கின்ற அவன்எங்கும் நிறைவானடா
சாயிராம்..சாயிராம்..சாயிராம்
(MUSIC)
உயிர்-காக்க நீர்-தந்த தாயல்லவோ
அவன் பால் போன்ற மனம் கொண்ட சேயல்லவோ
(2)
திருநாமம் பசிபோக்கும் விருந்தல்லவோ (2)
பந்தப் பிறப்பென்ற நோய்போக்கும் மருந்தல்லவோ
சாயிராம்..சாயிராம்..சாயிராம்
சாயித் திருப்புகழைப் பாடிவா
புகல்தேடி அவன்-பதத்தை நாடிவா
சாயிராம்..சாயிராம்..சாயிராம்..(2)
சாயித் திருப்புகழைப் பாடிவா
புகல்தேடி அவன்-பதத்தை நாடிவா
சாயிராம்..சாயிராம்..சாயிராம்
No comments:
Post a Comment