Saturday, May 6, 2017

106. கண்ணே நம்சாயி ( கண்ணை நம்பாதே ) ***



கண்ணே-நம்சாயி ...
உண்மை-வடிவாகும்..
உண்மை-வடிவாகும் நீகாண யாவும் கையால்உருவாக்குது
அறிவைத் தான்-தந்து அன்பின்அருள்யாவும்-கடைக்கண்ணில் காட்டும் 
மெய்யே-மெய்யானது
(Short Music)
கண்ணே-நம்சாயி உண்மை-வடிவாகும் நீகாண யாவும் கையால்உருவாக்குது
அறிவைத் தான்-தந்து அன்பின்அருள்யாவும்-கடைக்கண்ணில்காட்டும் 
மெய்யே-மெய்யானது
(Music) (position for editing1:19)
மானிடத்தின் வேடத்திலே உலகத்திலே வந்தவனும்
கண்முன்னே தோன்றி-நிற்கும் சத்தியமே
(1+Short Music+1)
பார்த்திருக்கும் வேளையிலே கைதனிலே நீறளித்து 
நோய்போக்கி வினைதீர்க்கும் நித்தியமே
வாடும் நெஞ்சங்களும்  அவன்வரவில் தேறும்
தேடும் உள்ளங்களும் அவன் ஒளியைக் காணும்
கண்ணே-நம்சாயி ..
உண்மை-வடிவாகும் ..
உண்மை-வடிவாகும் நீகாண-யாவும் கையால்-உருவாக்குது
கையால்-உருவாக்குது 
(Music)
கணம்-உருகா நெஞ்சினிலும் அடைந்து-அதைக் கனியவைத்து
அருள்-சொரியும் கருணைகொண்ட அன்னைதாங்க
ஏன்மாற வேண்டும்என்று வாதம்செய்யும் நெஞ்சங்களும் 
மாறும்படி செய்யுமன்புத் தந்தைதாங்க
நன்மைஎப்போதும் செய்திடுவான்சாயி 
உண்மைவடிவாக வந்தவனே சாயி 
கண்ணே-நம்சாயி....
 (Music)
பொன்பதத்தைக் கண்டுஅவன் தந்தவழி தினம்நடந்து
நீதேடித் புரிந்திடுவாய் சேவைதனை
(1+Short Music+1)
உன்மனத்தைச் சீரிடுவான் உன்உறவாய்-அவன்வருவான்
எதுவானபோதிலும் ஆதரவாய்
குன்றில்-குடியிருக்கும் வேங்கடவன் சாயி
குன்றைக் குடையாக்கும் கோவிந்தனும் சாயி
கண்ணே-நம்சாயி..
 உண்மை-வடிவாகும்..
உண்மை-வடிவாகும் நீகாண யாவும் கையால்உருவாக்குது
அறிவைத் தான்-தந்து அன்பின்அருள்யாவும்கடைக்கண்ணில் காட்டும் 
மெய்யே மெய்யானது.. மெய்யே மெய்யானது..



No comments:

Post a Comment