Saturday, April 29, 2017

96.காத்திடவே பிறந்துவிட்டான்( நேற்றுவரை நீயாரோ )***




காத்..திடவேபிறந்துவிட்டான்  நம்சாயீ
பார்த்திடுவோம் அவனழகை நாம்போயே
(2)
சேர்ந்திடுவோம் பர்த்திஎனும் ஓர்கோயில்
உலகம்தனில் அமைதிவர அதுவாயில்
காத்..திடவேபிறந்துவிட்டான்  நம்சாயீ
பார்த்திடுவோம் அவனழகை நாம்போயே
(Music)
தன்னையே பார்க்கும்நெஞ்சில் தன்னலம் நீகொள்ளாதே(2)
என்றவன் எங்கள்சாயீ வந்ததே அவனால்சேவை(2)
நேரிலே மானிடவேடம் உண்மையில் அவனேதெய்வம்
கூறிடும் வார்த்தையினாலே அற்புதங் கள்படைத்தானே
 காத்..திடவேபிறந்துவிட்டான்  நம்சாயீ
பார்த்திடுவோம் அவனழகை நாம்போயே
(Music)
பாவிகள் மனத்தையெல்லாம் சீர்செய்யும் தெய்வம் சாயி(2)
சாவிலும் வருவான்சாயி அதன்பின்னும் காப்பான்சாயி(2)
நெஞ்சிலே அவன்தாள் எண்ணி வாழுவாய் உலகில்இன்று
சுடர்விடும் ஒளியாய்வந்து விளங்குவான் பாபாநன்று
 காத்..திடவேபிறந்துவிட்டான்  நம்சாயீ
பார்த்திடுவோம் அவனழகை நாம்போயே
சேர்ந்திடுவோம் பர்த்திஎனும் ஓர்கோயில்
உலகம்தனில் அமைதிவர அதுவாயில்
காத்..திடவேபிறந்துவிட்டான்  நம்சாயீ
பார்த்திடுவோம் அவனழகை நாம்போயே



No comments:

Post a Comment