Wednesday, March 23, 2016

61. ரோஜா மலரே நாணிடும் (ரோஜா மலரே ராஜ குமாரி) ***




ரோஜாமலரே நாணிடும்-மென்மை பூஜைக்குரிய சாயிஉன் நெஞ்சம்
முழுதிலும்  அன்பன்றோ 
தொழுதிடும் விதமன்றோ
உன்திருப் பதமன்றோ
கேளாய்மனதே சாயியின்எதிரே யாரும் சமமன்றோ
பேதம்இலையன்றோ பாதம்நிலையன்றோ
ஏழைஎன்றாலும் பர்த்திபுரீசன் ராஜாமகனாய் ஏற்றிடுமிறைவன்
உண்மை-இதுவன்றோ அவனும்-இறையன்றோ
என்றும்-நிலையன்றோ
(Music)
வானத்தின்மீதே இருந்தாலும் தேவரைப்பெரிதாய்க் கொள்ளாது
கோட்டையின்-மேலே நின்றாலும் அரசனைச்சென்றே அடையாது
வாடிவதங்கும் ஏழையைத்தேடித் பாய்ந்திடும்சாயி அருளன்றோ (2)
கண்டிடத்தோன்றும் காட்சியிலே பாவங்கள்மாயும் வீழ்ச்சியிலே
பஞ்செனத்தோன்றும் அவன்இதயம் எரிக்கும்துயரை இதம்கொடுக்கும்
நன்றாய்வைக்கும் உலகத்தின்மாயப் பிடிப்பினைஅறுக்கும் தெரியாதோ (2)
ரோஜாமலரே நாணிடும்-மென்மை பூஜைக்குரிய சாயிஉன் நெஞ்சம்
முழுதிலும்  அன்பன்றோ 
தொழுதிடும் விதமன்றோ
உன்திருப் பதமன்றோ
(Music)
சாயீ..சன்பேர்-பாடுங்களேன் இச்சைபோக்கி நாடுங்களேன்
மண்ணில்-விண்ணை நாடுங்களேன் சொல்லில்இனிமை கூட்டுங்களேன்
ஓர்கதிஎன்றே திருவடி கொண்டே போற்றியேஅவனைப் பாடுங்களேன்(2)
ரோஜாமலரே நாணிடும்-மென்மை பூஜைக்குரிய சாயிஉன் நெஞ்சம்
முழுதிலும்  அன்பன்றோ 
தொழுதிடும் விதமன்றோ
உன்திருப் பதமன்றோ
 (BOTH)

No comments:

Post a Comment