Tuesday, March 22, 2016

53. பொல்லாத வினைபோக்க (கல்யாண வளையோசை) ***



பொல்லாத வினை போக்க மாலன்
மண்மேலே செய்தானே ஜாலம் + (sm)
(2)
காஷாயம் தனைக்கொண்ட கோலம்
தனில் வந்து புவியில்சா யீசன்
ஈசன்...  பர்த்தீசன்..(2)
அவன்பிறக்க ஒளிபிறக்க எங்கும் இருள் விலகிச் செல்ல
சிவன்எனவே பதம்எடுக்க லோகமெங்கும் அருள்கொடுக்க
பொல்லாத வினைபோக்க மாலன் மண்மேலே செய்தானே ஜாலம்
காஷாயம் தனைக்கொண்ட கோலம்  தனில் வந்து புவியில்சா யீசன்
(Music)
வந்தவனே பெரும்-சத்தியமே  மண்விளங்க வந்த-ஆண்டவனே (2)
மெய்யின்று மெய்வழிய கண்ணின்று அருள்பொழிய
புவியினிலே உயிர்களையே உயர்த்திடுவானாம் உயர்த்திடுவானாம்..
பொல்லாத வினைபோக்க மாலன் மண்மேலே செய்தானே ஜாலம்
காஷாயம் தனைக்கொண்ட கோலம்  தனில் வந்தான் புவியில்சா யீசன்
(Music)
நேர் வழியில் நம்மை நடத்திச் செல்ல
ஆ .. நடத்திச் செல்ல
பார் முழுதும் அன்பே நிறைந்திருக்க
அன்பே நிறைந்திருக்க
ஆஹா..நேர் வழியில் நம்மை நடத்திச் செல்ல
பார் முழுதும் அன்பே நிறைந்திருக்க
பாரதத்துக்  கண்ணனவன் கார்முகிலின் வண்ணனவன்
எண்ணத்திலே ஆனந்தமே வந்துபிறக்காதோ வந்துபிறக்காதோ
பொல்லாத வினைபோக்க மாலன் மண்மேலே செய்தானே ஜாலம்
காஷாயம் தனைக்கொண்ட கோலம்  தனில் வந்து புவியில்சா யீசன்

No comments:

Post a Comment