நெஞ்சில் அன்புகொண்ட ஸ்வாமியடா..
அவன்பாதத்தை மறக்கா மலேநெஞ்சில் நினைப்போமடா
அன்பினால் செய்கிற
சேவைக்கு
எல்லா நன்மைகளும் சாயீஸ்வரன் தருவானடா
ஆ..ஆ..ஆ..ஆ..ஆ.
பாடல்
மனம்தனிலே கோவில்கட்டி குணத்தினிலே குன்றுமாகி
தினமும்சாயி நாமம்கூறு மானிடனே
உன் பாவம்சென்று ஓடிப்போகும் அக்கணமே
மனம்தனிலே கோவில்கட்டி...(Thaalam)
குணத்தினிலே குன்றுமாகி...(Thaalam)
மனம்தனிலே கோவில்கட்டி குணத்தினிலே குன்றுமாகி
தினமும்சாயி நாமம்கூறு மானிடனே
உன் பாவம்சென்று ஓடிப்போகும் அக்கணமே
மனதினையே கலக்கும்
பொல்லா..
(Thaalam)
மனதினையே கலக்கும்
பொல்லா வினைகளையே களையும்
நல்லா
(2)
(2)
மனதிலிதைக் கொண்டிருந்து
என்றைக்குமே விரைவில்
பிறப்பிலிருந்து மீண்டுவிடு மானிடனே
(2)
வருந்தி யழும் உயிர்களுக்கு
விரைந்து சென்று உதவிசெய்து
(Thaalam)
வருந்தி யழும் உயிர்களுக்கு
விரைந்து சென்று உதவிசெய்து
சேவையிலே வாழ்ந்திரு-நீ மானிடனே
சேவையிலே வாழ்ந்திரு-நீ மானிடனே
சாயி மகிழ்ந்துகொடுக்கும் அருள்கிடைக்கும் பார் உடனே
(Short Dialogue)
வருந்தி யழும் உயிர்களுக்கு
விரைந்துசென்று உதவிசெய்து
சேவையிலே வாழ்ந்திரு-நீ மானிடனே
சேவையிலே வாழ்ந்திரு-நீ மானிடனே
சாயி மகிழ்ந்துகொடுக்கும் அருள்கிடைக்கும் பார் உடனே
வினைகள்வந்து-புதையவைக்கும் பொல்லாத வாழ்க்கையிலே
ஆ ஆ ஆ ஆ..
வினைகள்வந்து-புதையவைக்கும் பொல்லாத வாழ்க்கையிலே
கணமும்கூட மயங்கிடா..திருந்திடுநீ பாழும்
குழிஎனவே அறிந்திடுநீ மானிடனே
(2)
சேர்த்தபணமும்
குறைந்துபோகும் பார்த்தஅழகும் குலைந்து போகும்
நிரந்தரமாய்
எதுவுமில்லை கூறிடவே
இங்கு
நிரந்தரமாய் எதுவுமில்லை கூறிடவே
பர்த்தி நாதன்நாமம் மட்-டிலுமே மானிடனே
பர்த்தி நாதன்நாமம் மட்-டிலுமே மானிடனே
சேர்த்தபணமும் குறைந்துபோகும் பார்த்தஅழகும் குலைந்து போகும்
நிரந்தரமாய் எதுவுமில்லை கூறிடவே
பர்த்தி நாதன்நாமம் மட்-டிலுமே மானிடனே (2)
No comments:
Post a Comment