Monday, June 8, 2015

2. தந்தை வந்தான் ( கண்ணன் வந்தான் ) ***


( கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான் )
விருத்தம்
நம்பினார் கெடுவதில்லை நான்கு மறைத் தீர்ப்பு
 நல்லவர்க்கும் ஏழையர்க்கும் இவன் கழலே காப்பு
 பசிக்கு விருந்து வைப்பான் நோய்கள் தீர்த்து வைப்பான்
 பர்த்திநாதன் சன்னதிக்கு வாராய் நெஞ்சே..!
(MUSIC)
தந்தை வந்தான் அன்புத் தந்தை வந்தான்
மக்கள் துயர்தீர்க்க மண்ணில்அன்புத் தந்தை வந்தான்
(2)
தந்தை வந்தான்
(MUSIC)
தேடிவந்தோர் துயர்துடைக்கத் தந்தை வந்தான்
துன்பம்தனைத் துடைக்கத்திரு நீறைத் தந்தான்
(2)
அறிவின்ஒளி ஏற்றக் கல்வி சாலை  தந்தான்
பயின்றுமனம் களிக்கநல்ல நூலைத் தந்தான்
வறண்டிருக்கும் நிலத்தினிலே  நீராய் வந்தான்
இருண்டிருக்கும் வாழ்வினிலே  ஒளியைத் தந்தான்
மக்கள் துயர்தீர்க்க  மண்ணில் அன்புத் தந்தை வந்தான்
தந்தை வந்தான்
(MUSIC)
முடவர்களை நடக்கவைத்த  பர்த்தி நாதன்
மூடன்என்னை அறியவைத்த பர்த்தி நாதன்
(2)
குருடர்களின்  கண்திறந்த  பர்த்தி நாதன்
ஊமைஎன்னைப் பேசவைத்த பர்த்தி நாதன்
(2)
உடையாத நெஞ்சுநல்கும் ஸ்வாமிபாதம்
அடைந்திடவே தந்திடும்ப்ர சாந்தியாகும்
(Brief Pause)
சாந்தியாகும் மனச் சாந்தியாகும் ப்ரசாந்தியாகும்
தந்தை வந்தான் அன்புத் தந்தை வந்தான்
மக்கள் துயர்தீர்க்க  மண்ணில் அன்புத் தந்தை வந்தான்
தந்தை வந்தான்
வாவா பாபா வாவா பாபா
(MUSIC)
கருணைகொண்டு எங்களைநீ காத்திடு பாபா
அருளைத்தந்து எம்வினைகள் தீர்த்திடவே வா

 இனியுமுனை மறவாமனம் விரைந்தேநீ  தா
கனிவுடனெம் சேவைகண்டு மகிழ்ந்தேநீ வா
(2)
பணிந்து-உனை  வேண்டி நின்றோம் அருள்சா யீசா
விரைந்துநீயும்  பிரேமசாயி வடிவில் வாவா 
(2)
 வாவா பாபா வாவா பாபா
வாவா வாவா எங்கள் பாபா  பாபா
மீண்டும் பிரேம சாயி வடிவினிலே  நீவா பாபா 
வாவா பாபா
வாவா பாபா


No comments:

Post a Comment