பார் மேடை நாடகத்தில் நடிக்கத் தயக்கமா
இது முள்-பாதை என்பதனால் உனக்கும் கலக்கமா
(2)
பார் மேடை நாடகத்தில் நடிக்கத் தயக்கமா
மேலாடை போல-உடல் கழற்றியதேனோ
துணி-போல நீயுமதை உதறியதேனோ
பார்-மேடை நாடகத்தில் நடிக்கத் தயக்கமா
(MUSIC)
வாவென்று கூறாமல் அழைத்ததேனய்யா
நானும் தாவென்று கேளாமல் தந்ததேனய்யா
(2)
சொல்லொன்று சொல்லாமல் சென்றதேனைய்யா
என்றும் சுமையாக நினைவாக நின்றதேனய்யா
பார் மேடை நாடகத்தில் நடிக்கத் தயக்கமா
இது முள்-பாதை என்பதனால் உனக்கும் கலக்கமா
(MUSIC)
தத்தித்-தத்தி நடந்தனையே எந்தன்-சாயிமா நீ
முத்து-முத்தாய் பேசினதோ மழலை-தானம்மா
தத்தித்-தத்தி நடந்ததை-நான் காண முடியுமா நீ
முத்து-முத்தாய் பேசினதைக் கேட்க முடியுமா
கத்துகிறேன் கதறுகிறேன் சோகம் நெஞ்சிலே ..
அப்பொழுதும் எள்ளளவும் குறையவில்லையே
பார் மேடை நாடகத்தில் நடிக்கத் தயக்கமா
இது முள்-பாதை என்பதனால் உனக்கும் கலக்கமா
(MUSIC)
இங்கே-நான் காலமெல்லாம் கிடந்தழுதாலும்-பார்
உறவினிலே தனிமையினை விரட்டி வந்தாலும்
கட்டை-எனைச் சுட்டவுடன் மறைந்து விட்டாலும்-பார்
மறுபடியும் பிறந்து-வந்து உன்னைத் தேடுவேன்
பார் மேடை நாடகத்தில் நடிக்கத் தயக்கமா
இது முள்-பாதை என்பதனால் உனக்கும் கலக்கமா
பார் மேடை நாடகத்தில் நடிக்கத் தயக்கமா
No comments:
Post a Comment