Thursday, May 4, 2017

524. காத்து அருள்-கூறு-சாயி(நாலு பேருக்கு நன்றி)**



விருத்தம்
வேதத்தில் இருப்பதெல்லாம் சொல்லவோர் திறமை-இல்லை. 
நான் பூஜையைப்-புரிந்ததில்லை எனக்கதும் பெருத்த-தொல்லை
என்-தந்தையே உனது-நாமம் கூறி-நான் நாலு-கண்ணின் 
நீர்த்-துளி துடைத்தல்-கூட ஐயஹோ செய்யேன் ஐயா
 என்னைக்-காத்து அருள்-புரி சாயி..
____________________
(MUSIC)
காத்து அருள்-கூறு-சாயி என்னைப்-பார்த்து அருள்புரி-சாயி (2)
வேத-மூலம் அநாதி-நீயே நீசன்-எனையும் பார்த்துப்-பரிவுடன் 
காத்து அருள்-புரி சாயி என்னைக் காத்து அருள்புரி சாயி 
(MUSIC)
உபநிடதம் உயர்-வேதம் எனவே-ஆயிரம் இருக்கு 
அவையனைத்தும் கற்பதற்கோ வேண்டும்-பற்பல-பிறப்பு
ஆற்று-வெள்ளம் தன்னில்-ஆடும் தூசு-போலே நான்-இருக்கேனே (2)
இந்த-நிலையில் கற்கணும்-என்றால் தந்தை-நீ-தான் அருள்தர-வேண்டும்
காத்து அருள்புரி சாயி 
காத்து அருள்-கூறு-சாயி என்னைப்-பார்த்து அருள்புரி-சாயி 
வேத-மூலம் அநாதி-நீயே நீசன்-எனையும் பார்த்துப்-பரிவுடன் 
காத்து அருள்-புரி சாயி என்னைக்-காத்து அருள்புரி சாயி
(MUSIC)
இன்பத்தையே துரத்திடும்-நான் சகதியில் உழன்றிடும்-பன்றி
உண்பதையே நினைத்திடும்-நான் எங்கனம்-உய்வது ஒன்றி
போதும்-போதும் எனும்-போதெல்லாம் வேண்டும்-வேண்டும் என்றென்-மனமே (2)
பொன்னைக்-காட்டிப் பொருளைக்-காட்டி 
ஆசைமூட்டிக் கொல்லும்-தினமே 
(PAUSE)
என்னைக் காத்து அருள்புரி-சாயி 
காத்து அருள்-கூறு-சாயி என்னைப்-பார்த்து அருள்புரி-சாயி
வேத-மூலம் அநாதி-நீயே நீசன்-எனையும் பார்த்துப்-பரிவுடன் காத்து அருள்-புரி சாயி என்னைக் காத்து அருள்புரி சாயி






No comments:

Post a Comment