Thursday, May 4, 2017

523. அந்த ஸ்ரீ சாயி நாதனை (அந்த சிவகாமி மகனிடம்)



ஆ.. ஆ…. ஆ..
அந்த ஸ்ரீ-சாயி நாதனை வேண்டிக்கொள்ளடீ-மண்ணைச் 
சேரும் நாள்-பார்க்கச் சொல்லடி
(1+Short Music+1)
மனித உடலோடு தான்-பேசும் தெய்வம்-ஏதடி
ஸ்வாமி நில்லாமல் போனதேனடி    
(2)
அந்த ஸ்ரீ-சாயி நாதனை வேண்டிக்கொள்ளடீ-மண்ணைச் 
சேரும் நாள்-பார்க்கச் சொல்லடி
(MUSIC)
கண்கள் கருணையைக் காட்டிடும்-சோலை 
நெஞ்சினில்-புகுந்ததும் மயக்கிடும்-ஆளை
(2)
பிள்ளைகள்-பூமியில் ஏங்கிடும்-போதே 
தாய்-வந்து அணைக்காமல் வேறென்ன-வேலை
(2)
தோழி-தெரியுமா என்றுமென் நெஞ்சிலே 
(1+Pause+1)
நினைவாக என்-சாயி வாழுறானே
நெஞ்சில்-நினைவாக நிழலாக-ஆடுறானே 
இன்றே மண்ணில்-வந்தாடச் சொல்லடி
(MUSIC)
 (Swami enters the scene)
ஓ…. ஓ.. ஓ.. ம்
ஆ.. ஹாஹா..
(Music)
நிழலாய் நினைவில்-நான் இருப்பதைச் சொல்லும்  
குழந்தாய் என்-நிஜம் த்யானத்தில்-தோன்றும் 
(2)
ஆ.. (Parallelly)
நினைவில்-ஆடினால் கண்களும்-காணுமோ 
த்யானம்-கூடினால் உன்னுடல் தோன்றுமோ 
(2)
த்யானம்-கூடினால் என்னுடல் வேண்டுமோ (2)

முயல்வேனே முயல்வேனே நல்ல நாளில்
நானும் முயல்வேனே முயல்வேனே உனது-ஆணை

எந்தன் நிஜம்-காண நீ-உடன்
எந்தன் நிஜம்-காண நீ-உடன் த்யானம் பூணடி*
மண்டூ அதற்கோர் நாள் பார்ப்பதென்னடி 
என்றும்-என்னோடு நீ-பேச வார்த்தை ஏனடி 
த்யானம் கொள்ளாமல் பேச்சு வீணடி
ஆ..
எந்தன் ஸ்ரீ-சாயிநாதனை எந்தன் ஸ்ரீ-சாயிநாதனை 
எந்தன் ஸ்ரீ-சாயிநாதனைக் காணுவேனடி 
இன்றே த்யானம் நான்-கொள்ளு..வேனடி

Note:
* இறைவன் ஒருவனே புருஷன். மற்ற ஜீவர்கள் எல்லாம் பெண்களே ஆகும்








No comments:

Post a Comment