Thursday, May 4, 2017

522. நம் வாழ்வினிலே(ஒரு தாய் வயிற்றில்) **

நம் வாழ்வினிலே- இறைவன்-பேரினையே ஒரு தரம்-உரைத்தால் நமக்கு உயர்வு-வரும்
(2)
பெரிய கடல்-கடக்கும்-அந்த படகினுக்கும் சிறு துடுப்பினில்-தான் நகரும் திறன்-பிறக்கும்
நம் வாழ்வினிலே- இறைவன் பேரினையே ஒரு தரம்-உரைத்தால் நமக்கு உயர்வு-வரும் 
(MUSIC)
நாளும்-அதிகாலை விழித்து எழும்-போதே கவலை வந்தாடுமே 
பிறகு பலவேலை உலகில்-உறவாகிப் பிரித்து உனை-மேயுமே
என்று-தான் நிம்மதி கொண்டு-நான் வாழலாம்
என்றே சொல்லும்-தம்பி சாயி-பேரைச் கூறடா 
நம் வாழ்வினிலே- இறைவன்-பேரினையே ஒரு தரம்-உரைத்தால் நமக்கு உயர்வு-வரும்
(MUSIC)
தினமும் ஒருபாதை கணமும் ஒரு-போதை என்று-அலைகின்றது 
உடலை-நிஜமென்ற நினைப்பு-உருவாகி மனது கலைகின்றது
உண்ணுவோம் உறங்குவோம் என்பதே வாழ்க்கையா
சொல்வோம் சாயி-சாயி என்று-நாளும்  வேட்கையாய்  
நம் வாழ்வினிலே- இறைவன்-பேரினையே ஒரு தரம்-உரைத்தால் நமக்கு உயர்வு-வரும்
(MUSIC) 
மனது-தளராதே நாமம்-உனைக்காக்கும் என்று-அறிவாயடா 
தருமம் ஒருபோதும் மறைந்து-அழியாது திரும்ப வரும்-ஆமடா
(2)
என்று-நம் சத்தியம் சொன்னது சத்தியம்
அன்பாய்ச் சொல்லு-பண்பாய் சேவை-செய்வாய் நித்தியம்
பேரே காக்கும்-என்றார் என்றும் அதுதான்-சத்தியம்
நம் வாழ்வினிலே- இறைவன்-பேரினையே ஒரு தரம்-உரைத்தால் நமக்கு உயர்வு-வரும்
பெரிய கடல்-கடக்கும்-அந்த படகினுக்கும் 
சிறு துடுப்பினில்-தான் நகரும் திறன்-பிறக்கும்
நம் வாழ்வினிலே-சாயி பேரினையே ஒரு தரம்-உரைத்தால் நமக்கு உயர்வு-வரும்

No comments:

Post a Comment