Thursday, May 4, 2017

521. மெய்யொன்று கண்டேன் (பொன்னொன்று கண்டேன்)



மெய்யொன்று கண்டேன் மெய்-சென்று நின்றேன்
மெய்கொண்டு மெய்-வந்த..தேயடா
என்னென்று நான்-சொல்லு..வேனடா
(Short     Music)
ஆறென்று-கண்ணில் நீர்-ஓட நின்றேன்
நானன்று ஓர்-பித்தன் தானடா
கேளின்று நான்-சொல்லக் கேளடா
(MUSIC)
நடமாடும்-பாதம் அது-புண்ட..ரீகம் -
அதைக்-காண நெஞ்சம் அலை-மோதி ஓடும்
அதைக் காணக் கெஞ்சும் எனைப்பார்த்து தினமும்
பரிகாசம் செய்யும் புரியாத உலகம்
*கள்ளிருக்கும்..
மலர்ச்-சடையாள்..
*கள்ளிருக்கும் மலர்ச்-சடையாள்
உவந்திருக்கும்..
திரு உடையோன் ..
உவந்திருக்கும் திரு உடையோன் 
**சொல்கேட்டு வினைபோக்கும் ஸ்ரீராமன் அவனல்லவோ
என்றே .. ஆஹா .. நின்றே.. ஆஹா.. கண்டேன்
மெய்யொன்று கண்டேன் மெய்-சென்று நின்றேன்
மெய்கொண்டு மெய்-வந்த..தேயடா
என்னென்று நான்-சொல்லு..வேனடா
ஆறென்று-கண்ணில் நீர்-ஓட நின்றேன்
நானன்று ஓர்-பித்தன் தானடா
கேளின்று நான்-சொல்லக் கேளடா
(MUSIC)
**வான்-பார்த்த பிள்ளை கால்-போல முல்லைத்
தாள்-பார்த்த-பின்னே நான்-என்னில் இல்லை
பொன்-தேரைப் போலே என்-சாயி நேரே
நடக்கின்ற-காட்சி போல்-வேறு இல்லை
 என் விழியில்..
 நீர் பெருகி..
என் விழியில் நீர் பெருகி
சொல் மொழியில் ..
நான் குழவி
சொல் மொழியில் நான் குழவி
நானன்று-ஆணில்லை ஓர்-கன்று சேய்-போலவே
 என்றே .. ஆஹா .. நின்றே.. ஆஹா.. கண்டேன்
 மெய்யொன்று கண்டேன் மெய்-சென்று நின்றேன்
மெய்கொண்டு மெய்-வந்த..தேயடா
என்னென்று நான்-சொல்லு..வேனடா
ஆறென்று-கண்ணில் நீர்-ஓட நின்றேன்
நானன்று ஓர்-பித்தன் தானடா
கேளின்று நான்-சொல்லக் கேளடா

*கள்ளிருக்கும் மலர்ச்சடையாள் = சீதா தேவி (கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் ஜானகி..- கம்ப ராமாயணம்)
சீதா தேவி உகந்த மஹா விஷ்ணுவின் அவதாரம் (திருவுடையோன்=மஹா லக்ஷ்மியை உடையவன்)
**சொல்கேட்டு வினைபோக்கும் ஸ்ரீராமன் = அபயம் என்ற ஒரு சொல்லைக் கேட்டு வினைபோக்கும் ஸ்ரீராமன்
**வான்-பார்த்த பிள்ளை = வாமன அவதாரம்  


No comments:

Post a Comment