Thursday, May 4, 2017

517. யாரு வேறிங்கு கூறு ( நாலு பேருக்கு நன்றி ) **


விருத்தம்
உலகத்தின் அவதரிப்பில் சாயி-போல் யாருமில்லை
ஓர் தாயைப்-போல் பரிந்தளிக்க சாயி-போல் வேறு இல்லை 
ஹே சாயிராம் என்று நீ-உன் நெஞ்சினால் நினைத்துக் கொள்ள 
உடன்-உனை அணைத்துக்-கொள்ள எவருண்டோ சொல்லும் ஐயா
நீ-கூறு வே..றிங்கு யாரு
___________________________________

யாரு வேறிங்கு கூறு நீ கூறு வேறிங்கு யாரு (2)
தாயைப்-போல அலாதி-ப்ரேமை ஊட்டிக்-கொஞ்சித் தூக்கிக்-கொள்ள யாரு-வேறிங்கு கூறு..நீ கூறு வேறிங்கு யாரு
(MUSIC)
ப்ரேமை-என்னும் உடல்-பூண்டே இறைவன் உலகினில் இருந்து 
அனுதினமும் அருளியதே தரிசனமெனும்-அருள் விருந்து
ஆறு போலே கைவழிந்தோடும் நீறில்-உள்ளம் சாந்தம்-காணும் (2)
காந்தம்போலே கண்-வருமன்பால் மனதைக்கவரும் சாயியைப் போல
யாரு வேறிங்கு கூறு
யாரு வேறிங்கு கூறு நீ கூறு வேறிங்கு யாரு
தாயைப்-போல அலாதி-ப்ரேமை ஊட்டிக்-கொஞ்சித் தூக்கிக்-கொள்ள யாரு-வேறிங்கு கூறு..நீ கூறு வேறிங்கு யாரு
(MUSIC)
துன்பத்திலே நீ-அழுதால் வந்தேன் என்பது-சாயி
பக்கத்திலே தானிருக்கேன் கண்ணே என்பதும் சாயி

வாடும்-பயிரை நீராய்க் காத்தான் - 
வாடும் வயிறில் பாலை வார்த்தான்
(2)
தனக்கு-என்றே வந்திடும் போது
பருக்கை-தானே உண்ணக் கொண்டான் 
(PAUSE)
நீ கூறு வேறிங்கு யாரு
யாரு வேறிங்கு கூறு நீ கூறு வேறிங்கு யாரு
தாயைப்-போல அலாதி-ப்ரேமை ஊட்டிக்-கொஞ்சித் தூக்கிக்-கொள்ள 
யாரு-வேறிங்கு கூறு..நீ கூறு வேறிங்கு யாரு


No comments:

Post a Comment