Thursday, May 4, 2017

510. கண்ணன்-உருவாய் கீதை(முத்து நகையே) **

கண்ணன்-உருவாய் கீதை நீ-உரைத்தாய்.. ஐயா..ஐயா
சாயி-உருவாய் அன்பின் பாதை-தந்தாய் உண்மை தான்-கொடுத்தாய்
 (1+Short Music+1+ Short Music)
நிலவும் வானும் நிலமும் நீரும் உன்னிருந்து வந்ததல்லவோ 
நீயும் அதனைச் சொன்னதன் பிறகு எந்தன்-நெஞ்சில் ஐயம்எழுமோ
கண்ணன்-உருவாய் கீதை நீ-உரைத்தாய்.. ஐயா..ஐயா
 (MUSIC)
நான் மறையைத் தேனாய் நீ கொடுத்தாய் 
சத்தியத்தை நன்றாய் நீ உரைத்தாய்
(2)
என் மனதில் ஆழ இடம்-பிடித்தாய்
எழடா என-நீ அறிவுரைத்தாய்
கண்ணன்-உருவாய் கீதை நீ-உரைத்தாய்.. ஐயா..ஐயா
சாயி-உருவாய் அன்பின் பாதை-தந்தாய் உண்மை தான்-கொடுத்தாய்
(MUSIC)
உன்-நிஜத்தை நான்-யார் சொல்வதற்கு 
கைவிளக்கு ஏனோ பகலினுக்கு 
(2)
என்றெனை நீ கேட்டால்.. + (Short Music) 
என்றெனை நீ  கேட்டால் தெய்வத்துக்கு 
மனுவைக் கொடுப்பேன் வேறெதற்கு
நாளும் ஒரு பாட்டாய் தெய்வத்துக்கு
மனுவைக் கொடுப்பேன் வேறெதற்கு
(Short Music)
கண்ணன்-உருவாய் கீதை நீ-உரைத்தாய்.. ஐயா..ஐயா
சாயி உருவாய் அன்பின் பாதை தந்தாய் உண்மை தான்-கொடுத்தாய் 

No comments:

Post a Comment