செல்வனென்றா பிறந்தார் அவர்-எளிய வீட்டில் பிறந்தார்
மன்னனென்றா வாழ்ந்தார் சாயி தொண்டனாக உழைத்தார்
(2)

(MUSIC)
மண்குடிசை வாசம்கொண்டார் தலையணையாய்க் கையைக் கொண்டார்
(SM)

சுவையுமிலா கூழையன்றோ தினமுமவர் குடித்துவந்தார்
சுகமான-வாழ்க்கை சொகுசான-போக்கை ஒருபோதும்-சாயி கொண்டதில்லை
செல்வனென்றா பிறந்தார் அவர்-எளிய வீட்டில் பிறந்தார்
மன்னனென்றா வாழ்ந்தார் சாயி தொண்டனாக உழைத்தார்
(MUSIC)
படைத்தவரே இறங்கிவந்தார் பசித்தவர்மேல் பாசம் கொண்டார்
தடுப்பதற்கே பிறப்பெடுத்தார் பிறப்பினுக்கே சிறப்பைத் தந்தார்
அவர்போல-அன்பை முழுதாக-மண்ணில்
ஒருபோதும் -தெய்வம் கொடுத்ததில்லை
செல்வனென்றா பிறந்தார் அவர்-எளிய வீட்டில் பிறந்தார்
மன்னனென்றா வாழ்ந்தார் சாயி தொண்டனாக உழைத்தார்
(MUSIC)
இல்லை-என்றே சொல்லிடுவார் இல்லை-என்னும் சொல்லை-ஒன்றே

விழி-வழிய அன்பிருக்கும் மனம்-நிறைய அது கொடுக்கும்
அன்பென்ற-ரூபம் நம்-ரூபம்-என்று அழகாக-நமக்குப் புரிய வைத்தார்
செல்வனென்றா பிறந்தார் அவர்-எளிய வீட்டில் பிறந்தார்
மன்னனென்றா வாழ்ந்தார் சாயி தொண்டனாக உழைத்தார் (2)
No comments:
Post a Comment