Thursday, May 4, 2017

504. தாளம்மா சாயிபிரான் (கேளம்மா சின்ன பொண்ணு கேளு)


தாளம்மா சாயிபிரான் தாளு நீ ஓயும்போது சாஞ்சுக்க-அது தோளு
(2)
நாளை-வா என்றழைத்திடும் காடு
பிழைக்க வழி-கொடுக்கும் சாயி-தாளை நாடு நாடு  
தாளம்மா சாயிபிரான் தாளு நீ ஓயும்போது சாஞ்சுக்க-அது தோளு
(MUSIC)
 ஊழ்-படுத்தும் பாடு அதை எதுத்து-நிற்பது வீணு  (2)
அது உருட்டும்போதும் மிரட்டும்போதும் செல்லாது-உன் பீடு 
இப்பவே-நீ முழிக்கணும் சாயி-தாளை பிடிக்கணும்  (2)
தினம் முடிஞ்சவரை அவன்பெயரை நெஞ்சில் எண்ணி உருகணும் 
தாளம்மா  தாளு..தாளம்மா சாயிபிரான் தாளு
நீ ஓயும்போது சாஞ்சுக்க-அது தோளு
(MUSIC)
எது-வரினும் அவன்-பெயரைச் சொல்லிப் பழகணும் 
நீ மெத்தனமா இருக்கும்-போக்கை விட்டே ஒழிக்கணும்
விடிய-விடிய அவன்-உருவை த்யானம்-பண்ணனும் (2)  
 உந்தன் மனதைஅவனை உணரும்பணியில் பழக்கியாகணும் 
நாளும் நாளும் நன்றாய் பழக்கணும்
தாளம்மா
தாளம்மா சாயிபிரான் தாளு நீ ஓயும்போது சாஞ்சுக்க-அது தோளு
 (MUSIC)
காலை-மாலை என்று-வேளை பார்ப்பதை விடணும்
 அவன் பேரை-நெஞ்சில் நினைப்பதுவே பிழைப்பெனவே-வரணும்
(2)
 தாளைப்பற்றி பேரைச்சொன்னால்என்னென்னவோகிடைக்கும் (2)
 இதை எண்ணித்தாளைப் பிடித்துக் கொண்டால் மெய்ப்பொருள்- தானாய் விளங்கும்
தாளம்மா  தாளு..தாளம்மா சாயிபிரான் தாளு
மனம் ஓயும்போது சாஞ்சுக்க-அது தோளு


No comments:

Post a Comment