Thursday, May 4, 2017

503. தேனம்மா சாயி-சொல்லு (கேளம்மா சின்ன பொண்ணு கேளு)



தேனம்மா  சாயி-சொல்லு தேனு
அதைக் கேட்க-சொர்க்கம் தோணும்-நேரில் பாரு
(2)
வாய்மையே சாயி-கொண்ட பேரு 
ஊழை போக்க-வந்த சாமியவன் பாரு-பாரு
தேனம்மா  சாயி-சொல்லு தேனு
அதைக் கேட்க-சொர்க்கம் தோணும்-நேரில் பாரு + (MUSIC)
பர்த்தி-எனும் ஊரு அதில் எழுந்தருளிய..தாரு (2)
அந்த சிவபெருமான் சாயிரூபம் கொண்டு வந்திருக்..காரு
இதனை-நாமும் உணரணும் அவன்-புகழைப் பாடணும் (2)
அதைத் தடுப்பவரே மறுப்பவரே உண்மையை-நீங்க உணரணும்
தேனம்மா  தேனு..
தேனம்மா  சாயி-சொல்லு தேனு
அதைக் கேட்க-சொர்க்கம் தோணும்-நேரில் பாரு
(MUSIC)
கனிந்த-மனம் கொண்டு-சேவை செய்யப் பழகணும்
பிறரின் மனது-நோக நடக்கும்-குணத்தை விட்டு உதறணும்  
உருகி-உருகி உருகி-சாயி கீதம்-பாடணும் (2)
அதைப் பாடும்-குரல் இல்லையென்றால் காதால் கேட்கணும்
நாமும் போதும் காதால் கேட்கணும்
தேனம்மா  தேனம்மா  சாயி-சொல்லு தேனு
அதைக் கேட்க-சொர்க்கம் தோணும்-நேரில் பாரு 
(MUSIC)
காலையிலே எழுந்தவுடன் சாயி-சுப்ர..பாதம் 
பின் தினம்-புரியும் வேலையிலும் அவன்-நினைப்பே யோகம்
(2)
சாயி கீதம் என்ற ஒன்றால் என்னென்னவோ நடக்கும் (2)
இதை எண்ணிப்பார்க்க மறந்துவிட்டால் நிம்மதி-எங்கே கிடைக்கும்  
தேனம்மா  தேனு..தேனம்மா  சாயி-சொல்லு தேனு
அதைக் கேட்க-சொர்க்கம் தோணும்-நேரில் பாரு



No comments:

Post a Comment