Thursday, May 11, 2017

330. திருவடி-எடுத்து ( திருநிறைச் செல்வி ) **

விருத்தம் 
அன்று போல இன்றும்-காண…. ஏங்கும் நல்ல உள்ளங்களே 
ப்ரேமை தந்து-நாளை உலகம்-எங்கும் .. அருள்கொடுக்கும் அவன்-உருவே 
______________

திருவடி-எடுத்து கைகளை-உயர்த்தி தரிசனம்-தருவான் அழகாக
தன் திருவுளம்போலே திரும்பவும்வந்து அவதரிப்பானே அன்பாக 
அவதரிப்பானே அன்பாக 
திருவடி-எடுத்து கைகளை-உயர்த்தி தரிசனம்-தருவான் அழகாக தரிசனம்-தருவான் அழகாக
(MUSIC)
கெஞ்சும்குழந்தையை விரைந்தோடி அணைத்திடும்தாயென அவனிருக்க(2)
நெஞ்சம்-நிறைய பாசத்தை-ஏந்தித் தந்திட-சாயி பிறந்திருக்க (2)
நாள் ஒன்றுவேண்டும் நேரமும்வேண்டும் அதுவரைபொறுப்பாய் பதறாதே
ப்ரேமையில்-சாயி மண்ணில் பிறக்கும் காலமும்-பிறக்கும் கலங்காதே
திருவடி-எடுத்து கைகளை-உயர்த்தி தரிசனம்-தருவான் அழகாக
தரிசனம்-தருவான் அழகாக 
(MUSIC)
நெஞ்சின்-த்யானத்தில் ஒளியாவான் அவன் ஓம்எனும் பிரணவத்தின் ஒலியாவான் (2)
 திங்கள் சூடிடும் சிவனாவான் அவன் இன்னொரு முறை-புவி வந்திடுவான்
நாள் ஒன்றுவேண்டும் நேரமும்வேண்டும் அதுவரைபொறுப்பாய் பதறாதே
ப்ரேமையில்-சாயி மண்ணில் பிறக்கும் காலமும்-பிறக்கும் கலங்காதே
திருவடி-எடுத்து கைகளை-உயர்த்தி தரிசனம்-தருவான் அழகாக
தரிசனம்-தருவான் அழகாக
(MUSIC)
மனத்தினில் கனிந்து அன்புகொண்டு நல் சேவையைப் புரிந்திடு கையைக் கொண்டு 
(2)
எனுமவன் அறிவுரை நெஞ்சில் கொண்டு 
நாம் இசைத்திடுவோம்-சாயி கீதமின்று
(2)
நாள் ஒன்றுவேண்டும் நேரமும்வேண்டும் அதுவரைபொறுப்பாய் பதறாதே
ப்ரேமையில்-சாயி மண்ணில் பிறக்கும் காலமும்-பிறக்கும் கலங்காதே
திருவடி-எடுத்து கைகளை-உயர்த்தி தரிசனம்- தருவான் அழகாக
தன் திருவுளம்போலே திரும்பவும்வந்து அவதரிப்பானே அன்பாக 
அவதரிப்பானே அன்பாக

No comments:

Post a Comment