Wednesday, May 10, 2017

295. ஒரேமுறை சாயிநாமம்(இதோ எந்தன் தெய்வம் முன்னாலே)**




ஒரேமுறை சாயிநாமம் சொன்னாலே 
நான் வரேன்எனப் பாவம்போகும் தன்னாலே 
(2)
காசு-பணம் தாய்-மனதின் அன்பைஊட்டுமா 
உயிர் போகும்போது சொர்க்கவாசல் தன்னைக் காட்டுமா 
(2)
ஒரேமுறை சாயிநாமம் சொன்னாலே 
நான் வரேன்எனப் பாவம்போகும் தன்னாலே
(MUSIC)
பெரும் ஞானியர்கள் நெஞ்சங்களில் நினைப்பாய் 
அதை த்யானமதில்  கொண்டிருப்பார் முனைப்பாய்
(2)
  உயர் யாகங்களில் அதன்-ஜபமே சிறப்பாம்
சதுர் வேதங்களின் பொருள்- அதிலே இருப்பாம்
(2)
சாயி நாமம் ஒரே தரம் சொல்லிப்பாரய்யா
அதைச் சொல்லும்போது உன்பிறப்பு ஆகும் சீரய்யா    
ஒரேமுறை சாயிநாமம் சொன்னாலே 
நான் வரேன்எனப் பாவம்போகும் தன்னாலே
(MUSIC)
உன் கரம்-எடுத்துச் செய்திடணும் சேவை 
பிறர் மனம்-களிக்கப் போக்கிடணும் நோவை
பிறர் உருகிப் பாடும் சாயிகீத ஓசை
தனைக் கேட்பதிலே உனக்கு ஏனசூயை    
அதைக் கேட்பதிலே கொண்டிடணும் ஆசை 
ஒரேமுறை சாயிநாமம் சொன்னாலே 
நான் வரேன்எனப் பாவம்போகும் தன்னாலே
(MUSIC)
பிறர் துயர் துடைக்க அவன் கொடுத்த சேவை 
செய்து நீவிலக்கு தொடரும் உந்தன் ஊழை 
தினம் நீ எழுப்பும் சாயி நாம ஓசை 
அந்த பஜனையுமே ஆறு கால பூஜை 
அன்பு சேவையுமே ஆறு கால பூஜை
 சாயி நாமம் ஒரேதரம் சொல்லிப்பாரைய்யா
அதைச் சொல்லும்போது உன்பிறப்பு ஆகும் சீரய்யா 
ஒரேமுறை சாயிநாமம் சொன்னாலே
நான் வரேன்எனப் பாவம்போகும் தன்னாலே .. 
ஆ..ஆ.. ஓ ஓ ஓ ...

No comments:

Post a Comment