போகாதே சாயி போகாதே (2)
மறுபடியும் மண்ணைவிட்டுப் போகாதே
போகாதே சாயி போகாதே
(SM)
(2)
நீ வழங்கிய அன்பும் ஆதரவும்
மனம் கரைந்திடக் கதைசொல்லும் விதம்இருக்கும்
(2)
சக்தி கொடுக்கும் வினைகளை எடுக்கும் (2)
சத்தியத்தாய் உன்கை அருள்கொடுக்கும்
போகாதே சாயி போகாதே மறுபடியும் மண்ணைவிட்டுப் போகாதே
போகாதே சாயி போகாதே
(MUSIC)
என்னைக் கழுதையைப்போல் பாவம் சுமக்கவைத்து
விண்ணில் இருக்கும்ஞாயம் எங்குகற்றாய்
(2)
தினம் அல்லும்பகலுமழும் சேயின் குரல்மடுத்துக்
கேளாச் செவிகளைநீ என்று பெற்றாய்
அல்லும்பகலுமழும் சேயின் குரல்மடுத்துக்
கேளாச் செவிகளைநீ என்று பெற்றாய்
இறங்கிடைய்யா மண்ணில் பிறந்திடைய்யா ...ஆ..ஆ..ஆ..
இறங்கிடைய்யா மண்ணில் பிறந்திடைய்யா முன்போல்
உலகில் உள்ளோர்க்கெல்லாம் அருளிடைய்யா
போகாதே சாயி போகாதே மறுபடியும் மண்ணைவிட்டுப் போகாதே
போகாதே சாயி போகாதே
(MUSIC)
பார் சுமைதனை அன்னையைப்போல் தாங்கி இருந்தாய் (2)
உயர்பள்ளியில் கிட்டிடாத கல்வி அளித்தாய்
கடைதனில் வாங்கிடவும் கிடைத்திடுமோ
உந்தன் கருணைக்கு ஓர்விலையும் இருந்திடுமோ
மண்ணில் விருப்புடன் மீண்டும்வந்து பிறந்திடைய்யா
உந்தன் பொன்னான பாதங்களைக் காட்டிடைய்யா
போகாதே சாயி போகாதே மறுபடியும் மண்ணைவிட்டுப் போகாதே
போகாதே சாயி போகாதே
No comments:
Post a Comment